Published : 27 Jan 2023 06:06 AM
Last Updated : 27 Jan 2023 06:06 AM

கடலூர் அருகே தொழுதூரில் ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் கொடி ஏற்றியதாக சர்ச்சை

தொழுதூர் ஊராட்சியில் தேசியக்கொடி ஏற்றும் ஊராட்சித் துணைத் தலைவரின் கணவர் (நீல சட்டை அணிந்திருப்பவர்.

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் தொழுதூர் ஊராட்சியில் ஊராட்சி துணைத் தலைவரின் கணவன் தேசிய கொடிஏற்றியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கடலூர்மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியம் தொழுதூர் ஊராட்சித் தலைவராக இருப்பவர் குணசேகரன். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரான இவர் ஊராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான ஏற்பா டுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று அதே ஊராட்சியில் ஊராட்சி துணைத் தலைவராக உள்ள ரியாஸ் பானுவின் கணவர் அன்சர் அலி, ஊராட்சித் தலைவர் குணசேகரன் கொடியேற்ற சென்றபோது அவசர அவசரமாக அவரும் தேசிய கொடியை ஏற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கூடியிருந்தவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் கொடியேற்ற ஆர்வம் காட்டியது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த குணசேகரனை புறக் கணிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டதா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. உள்ளாட்சி விதிகளின்படி ஊராட்சியில் அதன்தலைவர் கொடியேற்ற வேண்டும். மாறாக உள்ளாட்சி நிர்வாகத்தின் எந்த பொறுப்பிலும் இல்லாத ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் கொடியேற்றி இருப்பது முரணாக உள்ளது.

இதுகுறித்து ஊராட்சித் தலை வர் குணசேகரனை கேட்டபோது, “நான் தான் கொடி ஏற்றினேன். அப்போது உடன் இறந்தவர்களை அருகே வருமாறு கூறினேன். ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் கொடியேற்ற வில்லை” எனத் தெரவித்தார்.

இதுதொடர்பாக மங்களூர் வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, “இதுகுறித்து தனக்கு தகவல் வரவில்லை. விசாரித்துவிட்டுகூறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x