

சென்னை அப்போலோ மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமியை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் நேற்று சந்தித்து உடல்நலம்விசாரித்தார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் நேற்று அப்போலோ மருத்துவ மனைக்குச் சென்றார். அங்கு உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோவை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “சோவின் உடல் நிலை குறித்து விசாரிக்க வந்தேன். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோ என்னிடம் கேட்டார். நானும் அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று சோவிடம் தெரிவித்தேன்.
மேலும், கருணாநிதிதான் உங்களது உடல் நலம் குறித்து விசாரித்து வரும்படி என்னை அனுப்பி வைத்தார் என்றும் சோவிடம் கூறினேன். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.