

மதுரை: பாஸ்போர்ட் பெறுவதில் நடை முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர் தலையீடு முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பா.வசந்தன் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலராக பா.வசந்தன் கடந்த ஜன.9-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: தென் மாவட்டங் களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தில் 2021-ம் ஆண்டில் 1,51,905 பாஸ்போர்ட்கள் வழங்கப் பட்டுள்ளன. கரோனா பாதிப்பு குறைந்ததால் 2022-ம் ஆண்டில் வழங்கிய பாஸ்போர்ட்கள் எண் ணிக்கை 2,27,811 ஆக உயர்ந் துள்ளது.
தினமும் பாஸ்போர்ட் கேட்டு 1,295 பேர் விண்ணப்பிக்கின்றனர். இவர்களுக்கு மறுநாளே விண் ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மதுரை மண்டலத்தில் மதுரை, திருநெல்வேலியில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இது தவிர 8 இடங்களில் கிளைகள் உள்ளன.
இதில் விருதுநகர், நாகர்கோவில் மையங்கள் ஆன்லைன் வசதி பெற்றவை. மற்ற மையங் களுக்கும் விரைவில் ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படும். பாஸ் போர்ட் சேவை மையங்கள் கூடுதல் வசதிகளுடன் 2.0 என மாற்றப்பட்டு இந்தாண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும். தட்கல் பாஸ்போர்ட் கேட்டு தினமும் 80 விண்ணப்பங்கள் வருகின்றன.
இதற்கு 3 ஆவணங்கள் சமர்ப் பிக்க வேண்டும். சரியாக இருந் தால் விண்ணப்பித்த அன்றே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு கட்டணம் ரூ.2 ஆயிரம் அதிகம். சாதாரண பாஸ்போர்ட்கள் 15 நாட்களில் கிடைத்துவிடும். போலீஸ் விசாரணை அறிக்கை கிடைத்த 3 நாட்களில் பாஸ்போர்ட் உரியவருக்கு அனுப்பப் பட்டு விடும்.
போலி பாஸ்போர்ட்களை முழு மையாக ஒழிக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை சான்றிதழ் அடிப்படையில் தான் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. மதுரை மாநகர் போலீஸில் இருந்து விசாரணை அறிக்கை கிடைக்க தாமதம் ஆகிறது. 21 நாட்களுக்குள் இந்த அறிக்கையை அவர்கள் அனுப்ப வேண்டும்.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதற்கு தீர்வுகாண சிறப்பு முகாம்கள் நடத்தப் படுகிறது. பாஸ்போர்ட் பெறு வதில் நடைமுறை எளிமையாக் கப்பட்டுள்ளது. இடைத்தரகர் தலையீடு ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.