Published : 26 Jan 2023 04:07 AM
Last Updated : 26 Jan 2023 04:07 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டி: தினகரன் அறிவிப்பு

தினகரன் | கோப்புப் படம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு அமமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசியது:

இந்தி மொழியை திணிக்கும் எந்தக் கட்சியும் தமிழகத்தில் வளராது.தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முயற்சித்த காங்கிரஸ், அதன்பிறகு ஆட்சிக்கு வர முடியவில்லை. அதே நிலை பாஜகவுக்கும் ஏற்படும். ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட பெற முடியாது. முன்னாள் முதல்வர் பழனிசாமியின் தவறான ஆட்சியால் திமுகவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது.

ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. மத்திய வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் தேர்வாகும் அளவுக்கு தமிழக அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோதெல்லாம், தனக்குப் பிடித்த அமைச்சரவை இலாகாக்களை கேட்டுப் பெற்றதைத் தவிர தமிழர்களுக்காக எதையும் திமுக செய்ததில்லை.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என திமுக முயற்சி செய்து வருகிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக அத்தொகுதியில் அமமுக போட்டியிடுகிறது. அதேபோன்று, வரக்கூடிய மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் எப்போது நடந்தாலும் அதிலும் அமமுக போட்டியிட்டு, முத்திரை பதிக்கும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x