Published : 26 Jan 2023 04:30 AM
Last Updated : 26 Jan 2023 04:30 AM
குடியாத்தம்: குடியாத்தத்தில் வீட்டை விட்டு விரட்டிய மகன்களால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை மீட்ட காவல் துறையினர் மகன்களாக இருந்து உணவு பரிமாறிய நிகழ்வை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கணவாய் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வர்கள் தெய்வசிகாமணி-காமாட்சி தம்பதினர். இவர்களது மகன்கள் பெற்றோருக்கு சாப்பாடு போடாமல் வீட்டைவிட்டு விரட்டியுள்ளனர். இதனால், விரக்தி யடைந்த தம்பதியினர் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு குடியாத்தம் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் விரைந்து சென்று இருவரையும் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை சமாதானம் செய்த காவலர்கள் சாப்பிடாமல் இருந்த இருவருக்கும் உணவகத்தில் இருந்து சாப்பாடு வரவழைத்து கொடுத்தனர்.
அதை சாப்பிட மறுத்தவர்கள் பெற்ற பிள்ளைகள் சாப்பாடு போடாத நிலையில், எதற்காக சாப்பிட வேண்டும் என மன வேதனையுடன் மறுத்துவிட்டனர். அவர்களை சமாதானம் செய்த காவலர்கள் எங்களை உங்கள் பிள்ளைகளாக நினைத்துக் கொள்ளுங்கள் என கூறினர். நீண்ட சமாதானத்துக்கு பிறகு அவர்களுக்கு காவலர்களே உணவை பரிமாறினர்.
இதையடுத்து, இருவரும் கண்ணீருடன் சாப்பிட ஆரம் பித்தனர். இந்த காட்சியை பார்த்தவர்கள் காவல் துறை யினரின் செயலை நெகழ்ச்சியுடன் பாராட்டினர். காவல் துறையினரின் இந்த நெகழ்ச்சியான பணியை செய்த உதவி ஆய்வாளர் மணி கண்டன், பெண் காவலர்கள் கிரிஜா, கற்பகம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பாராட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT