

புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளால் புதுச்சேரி மக்களை விட தமிழக மக்களே அதிக பயன் பெறுகிறார்கள். புதுச்சேரியில் தரமான மருத்துவம் கிடைக்கிறது என்பதாலேயே அவர்கள் இங்கு வருகின்றனர் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சட்டம்சார் மருத்துவ துறையின் சார்பில் நடைமுறை மருத்துவம் மற்றும் நடைமுறை சிக்கல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:
மருத்துவர்கள் தங்களுக்கு எவ்வாறு சட்ட சிக்கல்கள் ஏற் படும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும், நோயாளி களுக்கு கவனமாக எப்படி சிகிச்சையளிப்பது என்பது பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். தவறு நடந்து விட்டால் போலீஸார் கேட்கும் கேள்விகளுக்கும் நீதிமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் சூழல் ஏற்படும்.
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனையில் சுமார் 3 ஆயிரம் புறநோயாளிகளும், அரசு பொது மருத்துவமனையில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் புறநோயாளிகளும் தினமும் சிகிச்சை பெறுகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் 7 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். பொது மக் களுக்கு தரமான மருத்துவம் கொடுக்க முனைப்பாக உள்ளோம்.
கிராமப்புறங்களில் மாலை வேளையில் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளால் புதுச்சேரி மக்களை விட தமிழக மக்களே அதிக பயன் பெறுகிறார்கள். புதுச்சேரியில் தரமான மருத்துவம் கிடைக்கிறது என்பதாலேயே அவர்கள் இங்கு வருகின்றனர்.
நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கும்போது மருத்து வர்கள் பிரச்னையை சந்திக்கிறார் கள். மருத்துவர்கள் சரியான சிகிச்சையைதான் அளித்தோம் என்பார்கள். ஆனால் நோயாளி களோ தவறான சிகிச்சை என்று குற்றம்சாட்டுவார்கள். இந்த பிரச் சினை நீதிமன்றத்தில் தீர்க்கப்படும்.
தவறான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது. அதேபோல தவறான புகார்களை தெரிவிக்கும் நபர்களுக்கும் ஆதரவு அளிக்கக் கூடாது. நோயாளிகளின் நிலை குறித்து முழுமையாக மருத்து வர்கள் அறிக்கை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளி வரும் போது அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் பாபு, இயக்குநர் ராமன், மருத்துவக் கல்லூரி இயக்குநர் கோவிந்தராஜ், டீன் சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.