ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் போட்டி: சீமான் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுக்கோட்டை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 29-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வரும் 29-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும்” என்றார்.

அப்போது திமுக, அதிமுக போன்ற வலிமையான கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அவர்களை வலிமை என்று பேசாதீர்கள். அந்த வார்த்தையைப் பேசாதீர்கள். நான்தான் வலிமை. திமுக தனித்து நிற்குமா? எதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், எதற்கு காங்கிரஸ், எதற்கு மதிமுக, எதற்கு விடுதலை சிறுத்தைகள் இத்தனை கட்சிகள் எதற்கு உங்களுக்கு, தமிழக வாழ்வுரிமை அதுஇதுவென எல்லோரையும் சேர்த்துவைத்துக் கொண்டு ஏன் நிற்கிறீர்கள். வலிமை என்றால், நான் வலிமையானவன். யார் வருகிறீர்கள் என்று கூற வேண்டும் என்று சொல்லவேண்டும்.

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழருக்கு ஒரு சவாலும் கிடையாது. நான் பேசுவதற்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா என்று பாருங்கள். எனவே அவர்களுக்குத்தான் நான் சவால்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in