ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஐஜேகே ஆதரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஐஜேகே ஆதரவு
Updated on
1 min read

சென்னை: ஐஜேகே கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின்வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரது வழிகாட்டுதலில் தமிழக பாஜக சிறப்பாக இயங்கி வருகிறது. நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக பாஜகவின் நிலைப்பாட்டை, இந்திய ஜனநாயகக் கட்சி முழுமனதோடு ஆதரிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in