

மிகவும் அரிய ஆன்மிக நிகழ்வாக சென்னையில் 108 வைணவ திவ்ய தேசங்களின் கண்காட்சி நாளை முதல் ஜனவரி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்துக் கடவுளான நாராயணனின் வைணவ திருத்தலங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளன. இவற்றுள் மிகவும் முக்கியமான திருத்தலங்களைக் கூட முழுவதுமாக ஒருவர் தன் வாழ்நாளில் சென்று எளிதாக வழிபட்டுவிட முடியாது.
எனவே 108 வைணவ திவ்ய தேசங்களில் உள்ள மூலவர் சிலைகளைப் போல அச்சு அசலாக வடிவமைத்து ஒரே இடத்தில் கண்காட்சியாக வைத்து வழிபட ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘தி இந்து' தமிழ் நாளேடும், பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த 108 திவ்ய தேச ஆன்மிக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள் ளன.
இம்மாதம் 30-ம் தேதி (நாளை) முதல் ஜனவரி 10-ம் தேதி வரை சென்னை வானகரத்தில் உள்ள வாரு வெங்கடாசலபதி பேலஸில் மொத்தம் 12 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இதைக் காணலாம். தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வைணவ சிறப்பு சொற்பொழிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 7305658793, 9543668094 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.