Published : 25 Jan 2023 04:25 AM
Last Updated : 25 Jan 2023 04:25 AM
திருவண்ணாமலை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட தயாரா? என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.
அரசியலமைப்பை பாது காப்போம் - கையோடு கைகோர்ப் போம் பிரச்சாரம் குறித்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார்.
திருவண்ணமாலை நகரத் தலைவர் வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழககாங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கே.எஸ்.அழகிரி பேசும்போது, “காங்கிரஸ் மட்டும்தான், நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க கூடிய சக்தி படைத்தது.
அனைத்து மக்களுக்காகவும் நாம் இருக்கிறோம். அவர்களுடைய உரிமைகளை காப்பாற்ற இருக்கிறோம். இதனை மீண்டும் நினைவுப்படுத்தவே, நீண்ட நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க பாஜக நினைக்கிறது.
பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காங் கிரஸ் ஆட்சியில் ஆண்டுக்கு 3 கோடி பேருக்கு வேலை கொடுத் தோம். வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. நாட்டை ஆள்வதற்கு பாஜகவுக்கு தகுதியில்லை. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுக்கிறேன்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகபோட்டியிட வேண்டும். தனித்து நிற்க வேண்டாம், அதிமுக கூட்டணியிலேயே போட்டியிடுங்கள். பாஜகவில் அண்ணாமலையே போட்டியிட வேண்டும். யார்? வெற்றி பெறுகிறார் என பார்ப்போம். திமுக கூட்டணி என்பது கொள்கை கூட்டணி. அதனால், காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் போட்டியிட தமாகா, பாஜக, அதிமுக தயங்குகிறது. தேர்தலை சந்திக்க கூடிய ஆற்றல், அதிமுக கூட்டணியில் இல்லை” என்றார். கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமராஜ், மோகன், குமார், வினோதினி, துரைமுருகன், மாவட்டப் பொருளாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT