Published : 24 Jan 2023 07:33 PM
Last Updated : 24 Jan 2023 07:33 PM

சென்னைத் தீவுத்திடல் பொருட்காட்சி டெண்டருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

கோப்புப்படம்

சென்னை: சென்னைத் தீவுத்திடலில் நடந்துவரும் சுற்றுலா பொருட்காட்சிக்கான டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைத் தீவுத்திடலில் 47-வது சுற்றுலா பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரில் பங்கேற்க அளித்த விண்ணப்பித்தை நிராகரித்ததை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த பஃன் வேர்ல்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு செலுத்த வேண்டிய மூன்று லட்சம் ரூபாய் பாக்கி தொகையை செலுத்தாததால் டென்டரில் கலந்து கொள்ளும் தகுதியை அந்த நிறுவனம் இழந்து விட்டது. எனவே அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட தனி நீதிபதி வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து பஃன் வேர்ல்டு நிறுவனத்தின் சார்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில், "கடந்த 2017-ம் ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு செலுத்த வேண்டிய மூன்று லட்சம் ரூபாய் பாக்கி தொகையை செலுத்தாததால் டென்டரில் கலந்து கொள்ளும் தகுதியை மனுதாரர் நிறுவனம் இழந்து விட்டது. எனவே அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். கடந்தமுறை இந்த வழக்கு விசாரணையின்போது, தனிநீதிபதியின் அபராத உத்தரவுக்கு மட்டும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x