நாற்காலி கொண்டுவர தாமதம்: ஆத்திரத்தில் கல்லெறிந்த அமைச்சர் ஆவடி நாசர்

கல் அறிந்த அமைச்சர் நாசர்
கல் அறிந்த அமைச்சர் நாசர்
Updated on
1 min read

சென்னை: நாற்காலி எடுத்து வர தாமதம் ஆன காரணத்தால் கோபம் ஆகி, அதை எடுத்து வரச் சென்றவர் மீது அமைச்சர் ஆவடி நாசர் கல்லெறிந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

திருவள்ளுரில் நாளை (ஜன.25) மாலை வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த இடத்தில் பால் வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இன்று (ஜன.24) காலை ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் அமருவதற்கு நீண்ட நேரம் ஆகியும் நாற்காலி எடுத்து வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த அமைச்சர் ஆவடி நாசர், நாற்காலி எடுத்து வரச் சென்றவர்கள் மீது கல்லெறிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விமர்சனத்துக்குள்ளானது.

அந்த வீடியோவில், “போடா ஒரு சேர் எடுத்துட்டு வா, போடா ஒரு சேர் எடுத்துட்டு வாடா” என்று கோபமாக பேசியபடி கல்லை தூக்கி எறியும் காட்சி பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in