ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு

மாதிரி வாக்குப்பதிவு
மாதிரி வாக்குப்பதிவு
Updated on
1 min read

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.27-ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று (ஜன.24) நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணன் உண்ணி," மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. 1480 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது. இதில் 5 சதவீத இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவில் சோதனை செய்யப்பட்டது.

இதில் 1 சதவீத இயந்திரங்களில் 1200 வாக்குகளுக்கு அதிகமாகவும், 2 சதவீத இயந்திரங்களில் 1000 வாக்குகளும், மீதம் உள்ள இயந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்போது வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த பிரச்சினையும் இன்றி சரியாக செயல்படுகின்றன. இந்தப் பணி முடிந்ததும் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்." என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in