தமிழக முதல்வரான ஓபிஎஸ் தலைமையை விரும்பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

தமிழக முதல்வரான ஓபிஎஸ் தலைமையை விரும்பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
Updated on
1 min read

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் தின் கீழ் பணிபுரிய விரும் பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி னார்.

சென்னை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் திரு நாவுக்கரசர் நேற்று கூறியதாவது:

முதல்வரை மாற்ற வேண்டும் என்றால் அதிமுக எம்எல்ஏக்கள் கூடி முடிவு செய்ய வேண்டும். முதல்வருக்கு கீழ் பணியாற் றும் அமைச்சர்கள் தனித்தனி யாக தொலைக்காட்சி நிகழ்ச்சி களுக்கு சென்று ‘முதல்வர் பன்னீர்செல்வத்தை மாற்ற வேண் டும்’ என்று கூறுவது விதிகளின் படியும், ஜனநாயகத்தின்படியும் நாகரிகமான செயலாகத் தெரிய வில்லை. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கீழ் பணிபுரிய விரும்பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அமைச்சர வையில் இருந்துகொண்டே முதல்வரை விமர்சனம் செய்தால், கீழ் உள்ள அரசு அதிகாரிகள் எப்படி வேலை செய்வார்கள்?

மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது தமிழகத்தில் ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்றது. பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதுபற்றி மத்திய அமைச்சர் கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்து தெரி விக்கின்றனர். ஜல்லிக்கட்டு நடக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

விரைவில் நிர்வாகிகள் மாற்றம்

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாற்றம் குறித்து விவாதிப்பேன். தேவையான நிர்வாகிகள் மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும். வார்தா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. புயல் நிவாரண நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. முன்பணமாக ரூ.5 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி வரை உடனே வழங்க வேண்டும்.

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். ஊழல் செய் தவர்களிடம் சோதனை செய் வது சரியானதுதான். தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர் கள் சசிகலாவை சந்தித்தது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in