தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு

Published on

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் அவருக்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார்.

புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றதும், 31 அமைச்சர்கள் கூட்டாக பதவியேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி 25 நிமிடங்களில் நிறைவடைந்தது.

பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு ஜெயலலிதாவின் மறைவுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது.

ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in