அரூர் வனப்பகுதியில் சிதறிக் கிடந்த போலி ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு

அரூர் வனப்பகுதியில் சிதறிக்கிடந்த குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள்.
அரூர் வனப்பகுதியில் சிதறிக்கிடந்த குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள்.
Updated on
1 min read

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி வனப் பகுதியில் உள்ள காட்டு மாரியம்மன் கோயில் அருகே 2000, 200, 100, 10 ரூபாய் நோட்டுகள் சாலையோரத்தில் சிதறி கிடந்தன.

சாலையில் பயணம் செய்த சிலர் சிதறிக் கிடந்த நோட்டுகளை முண்டியடித்துக் கொண்டு எடுத்தனர். அவ்வழியே சென்ற மற்றவர்களும் வாகனங்களை நிறுத்தி விட்டு நோட்டுகளை எடுத்தனர். அனைத்து நோட்டுகளையும் எடுத்த பின்னரே அதன் உண்மைத் தன்மையைப் பற்றி ஆராய்ந்தனர்.

அப்போது தான் அவர்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் ஏற் பட்டது. கீழே கிடந்த நோட்டுகள் அனைத்தும் குழந்தைகள் விளையாடும் தாள்கள் எனத் தெரியவந்தது. இருப்பினும், குழந்தைகள் விளையாட பயன்படுத்தலாம் என அங்கிருந்த மக்கள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in