சென்னை | ‘ஓசி பயணம்' என தரக்குறைவாக பேசிய பேருந்து நடத்துநர் தற்காலிக பணி நீக்கம்

சென்னை | ‘ஓசி பயணம்' என தரக்குறைவாக பேசிய பேருந்து நடத்துநர் தற்காலிக பணி நீக்கம்
Updated on
1 min read

சென்னை: பெண்களுக்கான இலவச அரசு பேருந்தில் பயணித்த பெண்ணை பார்த்து, ஓசி பயணம் என சுட்டிக்காட்டி தரக்குறைவாக பேசிய பேருந்து நடத்துநர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் கடந்த 19-ம்தேதி எழும்பூரில் இருந்து திருவொற்றியூர் நோக்கி செல்லும் (தடம் எண் 28) அரசு பேருந்தில் பயணித்தார்.

அப்போது, கூட்டநெரிசலில் பேருந்து நடத்துநர் சிவசுதன், சங்கீதா மட்டுமின்றி அங்கிருந்த சில பெண் பயணிகளை குறிப்பிட்டு ஓசி பயணம்தான செய்றீங்க என்ற தொணியில் தரக்குறைவாக பேசினார்.

இச்சம்பவம் குறித்து சங்கீதா புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் பெண் பயணியைதரைக்குறைவாக பேசிய நடத்துநரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in