பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Updated on
1 min read

பாபர் மசூதி இடிப்பு தினம் 6-ம் தேதி வருகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருச்சி, சேலம், நெல்லை, கோவை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீஸார் உதவியுடன் தமிழக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலை யங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகளையும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். விமான நிலையங்களிலும் பாது காப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட் டுள்ளனர். ஆலந்தூர், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் போலீஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் முழுசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஸ்கேனர் கருவிகள் மூலம் பயணிகள் கொண்டுசெல்லும் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாநகர கமிஷனர்களும், மாவட்ட கண்காணிப்பாளர்களும் விழிப்புடன் இருக்கும்படி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in