

சேலம்: குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தினமான வரும் 26-ம் தேதி மற்றும் வள்ளலார் நினைவு தினமான பிப்.5-ம் தேதி ஆகிய 2 நாட்கள் மதுபானக் கடைகளை மூட அரசு உத்தர விடப்பட்டுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், மதுபானக்கூடங்கள், உரிமம்பெற்ற ஓட்டல்கள், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். அரசு உத்தரவை மீறி இவ்விரு தினங்களில் மது விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.