

சத்குரு தியாகராஜரின் 170-வது ஆராதனை விழாவுக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி திருவையாறில் நேற்று நடைபெற்றது.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜரின் 170-வது ஆராதனை விழா, திருவை யாறில் உள்ள அவரது சமாதி வளா கத்தில் வரும் ஜனவரி 13 முதல் 17-ம் தேதி வரை நடைபெறு கிறது.
ஜனவரி13-ம் தேதி முதல் தினமும் காலை முதல் இரவு வரை இசைக் கலைஞர்களின் இசை ஆராத னையும், இறுதி நாளான 17-ம் தேதி காலை 9 முதல் 10 மணி வரை இசைக் கலைஞர்கள் சேர்ந்திசைக்கும் பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
இதற்கான பந்தல் கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. ஆராதனை விழாவை நடத்தும் தியாகபிரம்ம மகோத்சவ சபையின் தலைவர் ஜி.ரங்கசாமி மூப்பனார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சபையின் செயலாளர்கள் அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேசன், உதவி செயலாளர் ஓ.எஸ்.அருண், அசோக் ரமணி, அறங்காவலர்கள் டெக்கான் மூர்த்தி, பஞ்சநதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.