வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜன. 23-ம் தேதி (இன்று) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றையொட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனி நிலவ வாய்ப்புள்ளது. ஜன. 24-ம் தேதி (நாளை) தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அவற்றையொட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன. 25, 26-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அவற்றையொட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in