

வத்தலகுண்டு: வத்தலகுண்டு நகர் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பீர்முகம்மது தலைமை வகித்தார்.
தேன்மொழி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அதிமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் நத்தம் ஆர்.விசுவநாதன் பேசியதாவது: ஈரோட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பழனிசாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெறும். 95 சதவீத அதிமுகவினர் பழனிசாமியின் பக்கம்தான் உள்ளனர்.
நாங்கள்தான் அதிமுக எனக்கூறி, அரசியல் செய்து வரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து நிற்க வேண்டும். அப்போதுதான் அவர்களது மரியாதை என்னவென மக்களுக்கு தெரியவரும். இவ்வாறு அவர் பேசினார்.