

ஒரு பலமான சவுக்கு இன்று சாய்ந்து கிடக்கிறது என்று சோ மறைவுக்கு நாசர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சோ மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய நாசர்,"எந்தொரு காரியத்தையும் கண்மூடித்தனமாக ஆதிரிப்பது என்பது ஒரு வழக்கமாக இருக்க, தான் ஆதரித்த ஒரு அமைப்போ, கட்சியோ தவறு செய்யும் போது அதை மிகவும் வலிறுத்திச் சொல்லுகின்ற ஒரே தைரியம் சோவிடம் உண்டு.
அவர் நடிகர் மட்டுமல்ல், மிகப்பெரும் வழக்கறிஞராக இருந்திருக்கிறார். இன்று அவருடைய மறைவு பத்திரிக்கை துறை, திரைத்துறை, அரசியல், நாடகத்துறை என பலதுறைகளுக்கு பெரும் இழப்பு. ஒரு பலமான சவுக்கு இன்று சாய்ந்து கிடக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் நாசர்.