Published : 22 Jan 2023 10:30 PM
Last Updated : 22 Jan 2023 10:30 PM

தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த எந்தவொரு திட்டத்தையும் திமுக இதுவரை செயல்படுத்தவில்லை: செல்லூர் ராஜூ பேச்சு

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ

மதுரை: திமுக விடியல் ஆட்சி தருகிறேன் என்று சொல்லிவிட்டு விடியா ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. வாக்குறுதி கொடுத்த பென்ஷன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. வாக்களித்த மக்களுக்கு பரிசாக மின்சார கட்டண உயர்வை தந்துள்ளது என மதுரை மீனாம்பள்புரம் பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேச்சு.

மதுரை - செல்லூர் மீனாம்பள்புரம் பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். மடிக்கணினி, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொடுத்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக நிகழ்த்தினார் ஜெயலலிதா.

மதுரை இன்று வளர்ந்த மாவட்டமாக இருப்பதற்கு காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள். அதை திறன்பட செய்து காட்டியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

வெறும் செல்லூர் ராஜூ என்னும் என்னை உலகறிய செய்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. என்னை பெற்றெடுத்தாத தாய் அவர்.

கூட்டுறவுத் துறையை என்னிடம் ஒப்படைத்த பொழுது சேவை செய்ய வேண்டும், ஏழை எளிய மக்களுக்கான துறை இந்த துறை என்று சொல்லிக் கொடுத்தார். இதுவரை நான் மக்களுக்காக மட்டுமே பாடுபட்டுள்ளேன். கடுகளவு கூட எவனிடமும் நான் கை நீட்டியது கிடையாது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு என எந்தவித திட்டங்களையும் கொண்டு வளரவில்லை. நம்முடைய திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறார் ஸ்டாலின்.

இங்கே இருக்கும் இரு அமைச்சர்களும் எந்தவித திட்டங்களையும் கொண்டு வரவில்லை மதுரை மக்களுக்கு என தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த ஆயிரம் ரூபாய் பென்ஷன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் திமுக இதுவரை செயல்படுத்தவில்லை.

விடியல் ஆட்சி தருகிறேன் என சொல்லிவிட்டு ஸ்டாலின் விடியா ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். மின்சார கட்டணத்தை பல மடங்கி உயர்த்தி சாதனை படைத்துள்ளது திமுக என தெரிவித்தார்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x