திருமகன் ஈவெரா மறைவு | ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

திருமகன் ஈவெரா மறைவு | ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து அவரது மகன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 5-ம் தேதி மாரடைப்பால் காலமானார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெராவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தார். திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அவர் எம்ஏல்ஏவாக பதவி வகித்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மகனை இழந்து வாடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து முதல்வர் மு.க,ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், தாமோ அன்பரசன், மேயர் பிரியா உள்ளிட்டோர் சென்றனர். மேலும் முன்னதாக காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு அளித்தால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது இளைய மகனை போட்டியிடச் செய்வேன் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in