கட்சிக்காக பாடுபட்ட மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்க வடக்கு திமுக தீர்மானம்

கட்சிக்காக பாடுபட்ட மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்க வடக்கு திமுக தீர்மானம்
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், ராஜாராவ் வீதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.-வுமான க.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் நந்தினி, பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர் மற்றும் மாநகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், கழகத்துக்காக பாடுபட்ட மூத்த முன்னோடிகளை கவுரவிக்கும் விதமாக, அவர்களுக்கு பொற்கிழி வழங்கப்படுமென முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறைந்தபட்சம் 6 உறுப்பினர் அட்டைகளை வைத்திருப்போர், மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in