

சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த துணை நடிகை கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் அழுகிய நிலையில் படுக்கை அறையில் மீட்கப்பட்டுள்ளது. கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் சினிமா துணை நடிகை ஜெய. சொந்த ஊர் சேலம் மாவட்டம். திருமணமாகவில்லை. இவர் தனது தம்பி பிரேம்குமாருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெய தனது தம்பியுடன் சொந்த ஊர் சென்றுள்ளார்.
பின்னர், அவர் மட்டும் 3 நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், ஜெய வீட்டில் இருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியுள்ளது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து, விருகம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
தி.நகர் துணை ஆணையர் சரவணன் தலைமையிலான விருகம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்த ஜெயயின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற னர். அங்கு ஜெய படுக்கை அறையில் நிர்வாணமாக அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். சடலத்தை மீட்ட போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள் ளன.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜெயயின் வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டுள் ளது. எனவே, ஜெயயை யாரோ கொலை செய்துவிட்டு வெளிப்புற மாக பூட்டிச் சென்றிருக்க வேண் டும். மேலும் படுக்கை அறையில் அவர் சடலமாக கிடந்ததால் அவரை யாரேனும் பாலியல் பலாத் காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்திருக்க வாய்ப்புள் ளது. அதன் அடிப்படையில் விசா ரணையை துவக்கியுள்ளோம்.
கடந்த வெள்ளி இரவு ஜெய கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. அவரது செல்போனில் பதிவான எண்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடந்து வருகிறது. ஆண் நண்பர்களின் பட்டியலையும் எடுத்துள்ளோம். மேலும், அக்கம் பக்கத்தினர், அதே பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்தும் விசாரணை நடக்கிறது. கொலையாளியை விரைவில் கைது செய்வது உறுதி” என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சபர்ணா என்ற துணை நடிகை மதுரவாயலில் உள்ள தனது வீட்டில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்போது, மீண்டும் ஒரு துணை நடிகை இதேபோல் மீட்கப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.