

மழைக் காலத்தில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க, மாலை நேரங்களிலும் பால் பாக்கெட்களை ஆவின் நிறுவனம், சிறு கடைகள், முகவர்களுக்கு விநியோகித்து வருகிறது.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் மூலம் கிடைத்த அனு பவங்களைக் கொண்டு இந்தாண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தட்டுப்பாடின்றி பால் கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. காலை மட்டுமின்றி மாலையிலும் முகவர் களுக்கு பால் பாக்கெட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து, புறநகர் பகுதியைச் சேர்ந்த முகவர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த சில மாதங்களாக , மாலை நேரத்திலும் ஆவின் பால் பாக்கெட்கள் குறிப்பிட்ட அளவு முகவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. குறிப் பாக, அடுத்த நாளுக்காக தயாரிக் கப்படும் பால் பாக்கெட்கள் முதல் நாள் மாலையே கிடைக் கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதிக ளவு பாக்கெட்களும் விற்பனை யாகி வருகின்றன’’ என்றார்.
இது தொடர்பாக ஆவின் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,‘‘இந்த திட்டம் கடந்த 8 மாதங்களாக செயல்படுத் தப்படுகிறது. சென்னையில் 15 மண்டலங்களிலும், 15 வழித் தடங்களில் வாகனங்கள் இயக்கப் படுகின்றன.
இந்த வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பால் பாக்கெட்கள், அங்குள்ள சிறு கடைகள், முகவர்கள் மற்றும் ஆவின் பார்லர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. பால் தேவைப்படுவோர் மண்டல அலுவலகங்களைத் தொடர்பு கொண்டால் அளிக்கிறோம். இதன் மூலம், ஆவின் பால் விற்பனை சென்னையில் 11.60 லட்சம் லிட்டரை எட்டியுள்ளது’’ என்றார்.