

தேசிய கீதத்தின் மீது இயற்கையாக பற்று வர வேண்டும் என மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பேசினார்.
அகில இந்திய வழக்கறிஞர்கள் ஒன்றியத்தின் 12-வது தேசிய மாநாடு மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று தொடங்கியது. அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா தலைமை வகித்தார். தமிழக தலைவர் என்.ஜி.ஆர்.பிரசாத் வரவேற்றார்.
கருத்தரங்கை மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணகாந்தி தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்தியாவில் வழங்கப்படும் தண்டனைகளில் அதிகபட்சமானது மரண தண்டனை. மரண தண்டனை கைதிகள் 270 பேரிடம் டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்களில் 216 பேர் போலீஸ் சித்திரவதை காரணமாக குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். போலீஸாரின் சித்திரவதையால் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் சித்திரவதைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா ஆதரவு அளிக்கவில்லை. ஆதரவு அளித்தால் இந்திய கைதி களிடம் வெளிநாட்டு போலீஸார் விசாரணை நடத்த வாய்ப்பு ஏற்படும். இதை தவிர்க்க ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை. போ லீஸ் சித்திரவதைக்கு எதிரா கவும், விசாரணைக் கைதிகள் நலனுக்காகவும் வழக்கறிஞர்கள் குரல் எழுப்ப வேண்டும்.
ஒருவரின் தேசப்பற்றை யாரும் கேள்வி கேட்க முடியாது. தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்த திணிக்கக் கூடாது. தேசிய கீத த்தின் மீது இயற்கையாகவே பற்று வர வேண்டும். வரம்புமீறிய போராட்டங்களை வழக்கறிஞர்கள் கைவிட வேண்டும். அது போன்ற போராட்டங்களால் பாதிக் கப்படுவது மக்களும், சட்ட ங்களும்தான் என்றார்.
இக்கருத்தரங்கு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.