Published : 22 Jan 2023 04:33 AM
Last Updated : 22 Jan 2023 04:33 AM
மதுரை: மதுரையில் நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜனை, மாநகர் திமுக செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ நேற்று திடீரென சந்தித்து பேசினார். இதையடுத்து கட்சி நிர்வாகிகளிடம் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மதுரை மாநகர் திமுகவில் நிர்வாகிகள் தேர்தலில் கட்சியினர் இரு பிரிவாகச் செயல்பட்டனர். மாநகர் செயலாளர் பதவிக்கு கோ.தளபதி எம்எல்ஏவும், மாண வரணி துணைச் செயலாளர் அதலை பி.செந்தில்குமாரும் போட்டியிட்டனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தளபதியை ஆதரித்தனர். அமைச்சர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் ஆகியோரின் ஆதரவும் தளபதிக்கு இருந்தது.
ஆனால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சில நிர்வாகி கள் செந்தில்குமாரை ஆதரித்தனர். தளபதிக்கே வெற்றி வாய்ப்பு இருந்ததால், கட்சித் தலைமையும் அவரையே தேர்வு செய்தது. இது மாநகராட்சி திமுக கவுன்சிலர்களின் செயல்பாட்டிலும் எதிரொலித்தது. அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனுக்கும், தளபதிக்கும் அதிகநெருக்கம் இல்லாத நிலை நீடித்தது.
இந்நிலையில், திடீர் மாற்றமாக நிதி அமைச்சரை, தளபதி நேரில் சந்தித்து வாழ்த்து பெற் றது கட்சியினரை ஆச்சரியப் படுத்தியது.
இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: மாநகர் திமுக செயல்பாடு, மாநகராட்சி கவுன்சிலர்கள் உள் ளிட்ட அனைவரையும் உள்ளடக்கி யது. இதில் இணக்கமான சூழல் உருவாக்கப்பட வேண்டும். இந்த சூழலில் மாநகர் திமுக நிர்வாகிகள் பலரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சில நாட் களாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து திமுக தலைமைக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து அமைச்சரை அவரது இல்லத்தில் சந்திக்கும்படி கோ.தளபதிக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியது. இதையடுத்து முதல்முறையாக அமைச்சரை வீடு தேடிச் சென்று தளபதி சந் தித்தார். அவருக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
இருவரும் சிறிதுநேரம் மாநகராட்சி, கட்சியின் செயல்பாடு குறித்து பேசினர். இந்த சந்திப்பால் இரு தரப்பு ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த உறவு சுமூகமாக நீடித்தால் மாநகர் திமுக செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT