கேரளாவில் இன்று முதல் படப்பிடிப்பு, புதுப்பட ரிலீஸ் நிறுத்தம்

கேரளாவில் இன்று முதல் படப்பிடிப்பு, புதுப்பட ரிலீஸ் நிறுத்தம்
Updated on
1 min read

திரைப்பட வசூலில் பங்கு பிரிப் பது தொடர்பாக சினிமா தயாரிப் பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த தால் இன்று முதல் மலையாளப் படப்பிடிப்பு, புதுப்பட ரிலீஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது.

கேரளாவில் தற்போது திரைப்பட வசூலில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு 60 சதவீத மும், திரையரங்க உரிமையாளர் களுக்கு 40 சதவீதமும் வழங்கப் படுகிறது. திரையரங்கு உரிமை யாளர்கள் தரப்பில், வசூலில் தற் போது உள்ளதைவிட 10 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். திரையரங்க உரிமையாளர்களின் கோரிக் கைக்கு மலையாள திரைப் படத் தயாரிப்பாளர்கள், விநியோ கஸ்தர்கள் சம்மதிக்கவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

வசூலில் கூடுதல் பங்கு கேட்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கு கண்டணம் தெரிவிக்கும்விதமாக, கேரளாவில் இன்று முதல் மலை யாள திரைப்படத் தயாரிப்புப் பணிகள் முற்றிலும் நிறுத்தப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மலையாள திரைப்பட ரிலீஸும் நிறுத்தி வைக் கப்படுகிறது. இதனால் கிறிஸ்து மஸை முன்னிட்டு மோகன்லால் நடித்த ‘முந்திரிவள்ளிகள் தளிர்க் கும் போல்’, மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளி யாக இருந்த ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’, பிருதிவிராஜின் ‘எஸ்ரா’ ஆகிய திரைப்படங்கள் வெளிவர முடியவில்லை. படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதால் பத்தாயிரத்துக்கும் மேற்பட் டோருக்கு வேலை இழப்பு ஏற் படும் நிலை உள்ளது.. புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளதால் மோகன் லாலின் ‘புலி முருகன்’, திலீப் தயாரிப்பில் வெளியான ‘கட்டப் பனையிலே’, ‘ரித்திக் ரோஷன்’ ஆகிய திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

சிங்கம் 1, 2 வெற்றிக்கு பிறகு சூர்யா நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கும் சிங்கம் -3 திரைப்படம் வரும் 23-ம் தேதி வெளியாகிறது. மலையாள புதுப்படங்கள் வெளி யிடப்படாத நிலையில், அங்கு உள்ள திரையரங்க உரிமையாளர் களின் கவனம் சிங்கம் 3-ன் மீது திரும்பியுள்ளது. இப்படத்தை திரை யிட கடும் போட்டி நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in