

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மதுரையில் இருந்து சீரடிக்கு வரும் 29-ம் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப் படுகிறது.
மதுரையில் இருந்து வரும் 29-ம் தேதி நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06071) மறுநாள் மாலை 4.05 மணிக்கு சாய் நகர் சீரடியை சென்றடையும். இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30 ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ஏசி ரயில் (01064) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தை சென்றடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 25-ம் தேதி (இன்று) தொடங்குகிறது.