Published : 13 Dec 2016 10:58 AM
Last Updated : 13 Dec 2016 10:58 AM

சென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும்: அமைச்சர் தகவல்

வார்தா புயலால் சென்னையிலும் புறநகரிலும் பரவலாக பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்துள்ளன. இதனால் தடைபட்ட மின்சாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் சீராகும் என மின்சார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை மதியம் முதலே நகரில் மின்சார விநியோகம் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சார துறை அமைச்சர் தங்கமணி, "சென்னையில் இன்று மதியம் அல்லது மாலைக்குள் மின் விநியோகம் சீர் செய்யப்படும். புறநகரில் மின் விநியோகம் சீர் செய்யப்பட சற்று தாமதமாகும்.

சென்னை நகருக்குள் 482 மின் கம்பங்களும், சென்னை புறநகர் பகுதிகளில் 4000 மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. அவற்றை சீர் செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகர் முழுவதும் 2810 மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மரம் வெட்டி அகற்றும் பணியில் வெளி மாவட்ட பணியாளர்கள் 4000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர நகர் முழுவதும் 33 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x