

பழைய 500, 100 ரூபாய் நோட்டு களுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை தரகு அடிப் படையில் மாற்றித் தருவதாகக் கூறி பணத்துடன் வந்த 4 பேரை 10 பேர் கொண்ட கும்பல் ஆயுதங் களால் தாக்கி பணத்தை கொள்ளை யடித்தது. இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை தெற்குவெளி வீதியைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான்(28). செல்போன் கடை வைத்துள்ளார். இவரது நண்பர்கள் முகமது ரபீக்(33), பாலகிருஷ்ணன்(34), வழக்கறிஞர் கண்ணன்(33). இவர் கள், புதிய 2000 ரூபாய் நோட்டு களை அதிக அளவில் வைத்துள்ள னர். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் 15 சதவீத தரகு அடிப்படையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக சிவகங்கையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரிடம் கூறியுள்ளனர்.
அவர்களை, சிவகங்கை மாவட் டம் இளையான்குடிக்கு பணத்து டன் வருமாறு சுப்புராஜ் தெரிவித் துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 4 பேரும் இளை யான்குடி சீராத்தங்குடி விலக்கு சாலையில் ஆள் நடமாட்டம் இல் லாத பகுதியில் காரில் காத்திருந் தனர். அங்கு சுப்புராஜ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் 2 கார் களில் வந்துள்ளனர். வந்த வேகத் தில் முஜிபுர் ரகுமானின் காரின் பின்புறம் மோதியுள்ளனர்.
இதில் நிலைதடுமாறிய முஜிபுர் ரகுமான் உள்ளிட்டோரை ஆயுதங் களால் தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பி லான புதிய 2,000 ரூபாய் நோட்டு களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். காயமடைந்த முஜிபுர் ரகுமான், முகமது ரபீக், கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் சிவ கங்கை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் அளித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதகுபட்டியைச் சேர்ந்த மந்த காளை என்ற அழகேசன், தெற்கு கோட்டையூரைச் சேர்ந்த வீர பாண்டி, அழகாபுரியைச் சேர்ந்த காளிதாஸ் ஆகியோரை கைது செய் தனர். ரூ.30 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் தப்பியோடிய கும்பலை பிடிக்க சிவகங்கை டிஎஸ்பி மங்களேஸ்வரன் தலை மையில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் பணம் கொடுப்பதற்கே வங்கிகள் கெடுபிடி காட்டி வரும் நிலையில், ரூ.30 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் இந்த 4 பேருக்கும் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
இதில் மதுரை யைச் சேர்ந்த வங்கி அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.