Published : 20 Jan 2023 05:06 AM
Last Updated : 20 Jan 2023 05:06 AM

10, 11, 12-ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு வெப்பினார் - ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’

ஏ.சதீஷ்குமார்

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப் படை, கப்பற்படை உள்ளிட்ட தேசத்தின் பாதுகாப்புத்துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறிய செய்யும் நோக்கில்‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம்காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்திருக்கின்றன.

இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 3, 4-ம் பகுதிகள் ஜன.21, 22-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் துறை சார்ந்தசிறப்பு வல்லுநர்கள் பங்கேற்று,அத்துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றி கலந்துரையாடவுள்ளனர்.

நாளை (ஜன. 21, சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரிஏ.சதீஷ்குமார், ‘இந்திய விமானப்படையிலுள்ள வேலைவாய்ப்புகள்’எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

நாளை மறுநாள் (ஜன. 22, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஓய்வுபெற்ற உதவி கமாண்டண்ட் என்.வி.ராஜூ,‘மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்.

இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும்அறிவியல் எழுத்தாளருமானடாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடுகிறார்.

இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/DKNP02என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்நிகழ்வில் பங்கேற்க முதலில் பதிவு செய்யும் 10 மாணவர்களுக்கு பத்ம டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x