Published : 20 Jan 2023 06:22 AM
Last Updated : 20 Jan 2023 06:22 AM
பழநி: பழநி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் உள்ளிட்ட டிக்கெட்டுகளில் ‘க்யூஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோயில்களில் கட்டண சேவை டிக்கெட்டுகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவதற்கான ‘க்யூஆர் கோடு’ வசதியை கடந்த வாரம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து, இத்திட்டம் அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.10, ரூ.20, ரூ.100 கட்டண தரிசனம், தங்க ரதம் இழுப்பதற்கும், காது குத்துவதற்கும், தங்கத் தொட்டிலில் குழந்தையை தாலாட்டுவதற்கும், அன்னதானம் மற்றும் பிற இனங்களுக்கும் வழங்கியதற்கான ரசீது உள்ளிட்டவற்றில் ‘க்யூஆர் கோடு’ அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.
க்யூஆர் கோடு, கோயில் பணியாளர்கள் மூலம் ஸ்கேன் செய்து பரிசோதிக்கப்படுகிறது. அதற்காக, 10-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஸ்கேனிங் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு முறை ஸ்கேன் செய்த டிக்கெடை மீண்டும் பயன்படுத்த முடியாது. ஸ்கேன் செய்யாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் அல்லது கண்காணிப்பாளரிடம் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT