கடலோர காவல் படையில் முதல்முறையாக கடல் ரோந்து பணியில் பெண் அதிகாரிகள் நியமனம்

கடலோர காவல் படையில் முதல்முறையாக கடல் ரோந்து பணியில் பெண் அதிகாரிகள் நியமனம்
Updated on
1 min read

கிழக்கு பிராந்திய கடலோரக் காவல் படை சார்பில் கடல் ரோந்து, கண்காணிப்பு பணியில் முதல்முறை யாக பெண் அதிகாரிகள் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

கடல் பகுதியில் நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப் பது, சர்வதேச கடல் எல்லை யில் நடைபெறும் ஊடுருவல்களை தடுப்பது ஆகிய பணிகளில் கட லோரக் காவல்படை ஈடுபட்டு வரு கிறது. நவீன ரக கப்பல், விமானம், கண்காணிப்பு சாதனங்கள் உதவி யுடன் இப்பணிகள் மேற்கொள் ளப்படுகின்றன.

இப்பணியில் இதுவரை ஆண் கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், கிழக்கு பிராந்திய கடலோரக் காவல்படை சார்பில் முதல்முறையாக பெண் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். துணை கமாண்டன்ட் அக்சி, விமானி சுனிதா மற்றும் பிரியங்கா தியாகி ஆகிய 3 பேரும் டார்னியர் விமானம் மூலம் கடல் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்தியக் கடற்பரப்பில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைக் கண்காணிப்பது, ஊடுருவல்களை தடுப்பது, மீட்பு பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுவார்கள்.

துணை கமாண்டன்ட் அக்சி 2014-ம் ஆண்டு கடலோரக் காவல்படை பணியில் சேர்ந்தார். இவர் 1,700 மணி நேரம் விமானத்தில் பறந்து பயிற்சி பெற்றவர். பிரியங்கா தியாகியும் 2014-ல் பணியில் சேர்ந்து 1,500 மணி நேரப் பயிற்சி பெற்றவர். 2011-ல் பணியில் சேர்ந்த சுனிதா 1,200 மணி நேரம் விமானத்தில் பறந்து பயிற்சி பெற்றவர்.

இப்பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இவர்கள், பெண்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்வதாக கடலோரக் காவல்படை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in