நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்: முதல்வர் இரங்கல் 

நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்: முதல்வர் இரங்கல் 

Published on

சென்னை: நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு தாயார் சரோஜினி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' வடிவேலுவிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in