

தென்கிழக்கு அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “தென்கிழக்கு அந்தமான் அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லை. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். காற்றழுத்தம், தமிழகத்தை நோக்கி நகர்ந்தால், 29-ம் தேதிக்கு பிறகு தென் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்.
அதிகாலையில் பனி மூட்டம்
சென்னையை பொருத்த வரை, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதி காலை நேரத்தில் சில இடங்களில் பனி மூட்டம் நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.