

விழுப்புரம்: தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோ தரரும், புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அதிகாலை காலமானார்.
அவரது உடல் நேற்று முன்தினம் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று காலை டாக்டர். க. தியாகராஜன் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அமைச்சர் க.பொன்முடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று விழுப்புரத்திற்கு வந்து பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது எம்பி கௌதமசிகாமணி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.