திருப்பூர் எய்ம்ஸ் மாணவர் மரணத்தில் சிபிஐ விசாரணை கோரும் பெற்றோர்

திருப்பூர் எய்ம்ஸ் மாணவர் மரணத்தில் சிபிஐ விசாரணை கோரும் பெற்றோர்
Updated on
1 min read

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கல்வி அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) எம்.டி. பயின்ற திருப்பூர் மாணவரின் மர்ம மரணம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் டெல்லி போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. எனவே, இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண் டும் என்று அவரது பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்த கணபதி, யுவராணி ஆகியோரது மகன் சரணவன். மதுரையில் எம்.பி.பி.எஸ். முடித்த இவர், டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் தகுதி அடிப்படையில் எம்.டி. படிக்க வாய்ப்பு பெற்றார். அங்கு சேர்ந்த சில நாட்களில் கடந்த ஜூலை 10-ம் தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக டெல்லி போலீஸார் முதலில் தெரி வித்தனர். ஆனால், அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து 6 மாதங்களாகியும் போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவில்லை என்று அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் செய்தியாளர் களிடம் கணேசன், யுவராணி ஆகியோர் நேற்று கூறியதாவது: தகுதி அடிப்படையில் எய்ம்ஸ் கல்லூரியில் எம்.டி. பயில சரவண னுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், யாரோ அவரை திட்டமிட்டுக் கொலை செய்துள் ளது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது.

அவரது கொலையில் பலம் வாய்ந்தவர்களின் பின்னணி இருப்பதாகக் கருதுகிறோம்.

இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களுக்குள் எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் நவ. 20-ம் தேதி உத்தரவிட்டும் இதுவரை பதிவு செய்யவில்லை. வரும் ஜன. 10-ம் தேதி இவ்வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. அப்போது, நீதிமன்றத்தின் உத்தரவை நிறை வேற்றாதது குறித்து முறையிட உள்ளோம்.

இது தொடர்பாக நியாயம் கோரி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினோம். பிரதமர் அலுவலகம் அந்தக் கடிதத்தை தமிழக தலைமைச் செயலாளருக்கு நவம்பர் 12-ம் தேதி அனுப்பியது. ஆனால், தலைமைச் செயலாளரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கவும், டெல்லி உயர் நீதி மன்றத்தில் வாதாட, மூத்த வழக் கறிஞரை நியமிக்கவும் தமிழக அரசு உதவ வேண்டும். இது தொடர்பாக தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளரை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

இந்த வழக்கில், டெல்லி போலீஸார் சரியான முறையில் செயல்படுவர் என்ற நம்பிக்கை இல்லை. அவர்கள் யாரையோ காப்பாற்றுவதற்காக, இந்தக் கொலையை மூடிமறைக்கப் பார்க்கின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தர விட வேண்டும். இது தொடர்பாக வும் நீதிமன்றத்தில் வலியுறுத்த உள்ளோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in