

திண்டுக்கல் மாவட்டம் சின்னாள பட்டியில் வசித்துவரும் முன்னாள் எம்பி மாயத்தேவர் ’தி இந்து’ விடம் கூறியதாவது:
திமுகவை விட்டு எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டவுடன் அவர் மீதும் அவரை ஆதரித்தவர்கள் மீதும் பல பொய் வழக்குகள் போடப் பட்டன. அப்போது சென்னையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிய நான், அந்த வழக்கு களை எல்லாம் நடத்தி வெற்றிகண் டேன்.
வழக்கு சம்பந்தமாக எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் நெருங்கி பழகி னேன். அவரும் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார். அதிமுக தொடங்கப்பட்ட பிறகு முதன் முதலாக திண்டுக்கல் நாடாளு மன்றத் தொகுதிக்கு இடைத்தேர் தல் வந்தது. இதில் போட்டியிட காளிமுத்து வேறு ஒருவரை சிபாரிசு செய்தார். ஆனால், மாயத்தேவர்தான் நிற்க வேண்டும் என எம்.ஜி.ஆர். முடிவுசெய்து என்னைத் தேர்தலில் நிறுத்தினார். அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி நான்தான்.
தேர்தலில் சின்னம் ஒதுக்கும் போது இரட்டைஇலையைப் பெறலாம் என்று சொன்னவுடன் அதற்கு எம்.ஜி.ஆரும் சம்மதித் தார். நான் தேர்வு செய்த சின்னம் தான் இரட்டை இலை. மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி அமைந்தபோது என்னை மத்திய மத்திரி ஆக்காமல் சத்தியவாணி முத்துக்கு மந்திரி பதவி வாங்கிக் கொடுத்தார்.
இதனால் ஏற்பட்ட கோபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறி னேன். பின்னர் திமுக சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இதன்பின்னர் இன் னொரு முறை போட்டியிட்டு தோற்றேன். தொடர்ந்து உடல் நிலை சரியில்லாததால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.
அதிமுகவை காப்பாற்ற
தற்போது அதிமுக அரசி யலே குழப்பமாக உள்ளது. ஜெயலலிதாவுக்குப் பின்னர் சசிகலா வந்தால் நன்றாகத்தான் இருக்கும். இவரை விட்டால் குறிப்பிட்டுச்சொல்லும்படி வேறு ஆட்கள் கட்சியில் இல்லை. ஜெயலலிதாவுடன் இருந்ததால் கட்சியினர் அனைவருக்கும் அறிமுகமான நபர் சசிகலா. மேலும் கட்சியின் பொதுச் செயலாளராக வேறு யாரும் பொறுப்பேற்றால் ஜாதிகள் மூலமாகவோ அல்லது தென்பகுதி, வடபகுதி என கோஷ்டிகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
இவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் அதிமுக வைக் காப்பாற்ற வேண்டுமானால் தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதா உடன் இருந்த சசிகலாவை கட்சியினர் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.