வரலாற்று பண்பாட்டுச் சூழலில் குறிப்பிட்டேன் - தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப் படம்
ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்று பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

னது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பாடு என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பேச்சு அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்களை விவாதப் பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in