

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர், பெட்டகுரும்பர், ஆலு குரும்பர் ஆகிய பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டவில்லை. இதற்கு, இறப்பு சதவீதம் அதிகரிப்பதும், பிறப்பு சதவீதம் குறைவதுமே காரணம்.
மரபு நோய்
இப்போது, இவர்கள் மரபு சார்ந்த ரத்தசோகை (Sickle cell anemia) நோயால் பாதிக்கப்பட்டு சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பழங்குடியினரில், 2 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களின் ரத்த அணுக்கள், அரிவாள் வடிவில் மாறிவிடும்.
தலை வலி, மூட்டு வலி, பசியின்மை, நோய் எதிர்ப்பு சக்தி யின்மை உள்ளிட்ட உடல் உறுப்பு வலிகள், இவர்களின் வாழ்வை மெல்ல, மெல்ல அழிக்கும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் பாதி வயதை கடப்பதே அரிது என்ற ரீதியில், இந்நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்காத நிலை யில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆதிவாசிகள் நலச் சங்கத் தலைவர் ஆல்வாஸ் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்நோய் பாதிப் புக்கு, தங்கள் உறவுகளிலேயே அவர்கள் திருமணம் செய்துகொள் வது தான் காரணம். நோய் பாதிக் கப்பட்டவர்களின் ரத்த அணுக்கள் அரிவாள் போன்று மாறிவிடும். இதனால், 40 முதல் 45 வயதுக் குள்ளேயே இறந்துவிடுகின்றனர்.
பழங்குடியினரை பரிசோதித்து, அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறோம். கடந்த 2009-ம் ஆண்டு முதல் தமிழக அரசுடன் இணைந்து, இப்பணியை மேற்கொண்டு வருகிறோம்.
எங்கள் சங்கம் சார்பில் மருத்துவர், ஆலோசகர், ஆய்வக தொழில்நுட்புநர் கொண்ட குழு, 2 மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து பழங்குடியினர் கிராமங்களுக்கும் சென்று பரிசோதனை செய்து வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டை மற்றும் சத்துள்ள உணவு அளிக்க வேண்டும். பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள நிலையில், ஊட்டச்சத்தான உணவு உட்கொள்வது அரிது. முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை வழங்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்தால், குழந்தைக்கு அந்த பாதிப்பு இருக்கும். இதைத் தடுக்கும் வகையில், திருமண வயது அடையும் வரை உள்ள குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
தமிழக அரசு சார்பில் குழந்தை களை பரிசோதித்து கண்காணிக் கும் திட்டம் பரிசீலனையில் உள் ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மூலமாக முதியோர் ஓய்வூதி யத் தொகை பெற்றுத் தருகிறோம்.
ஒடிசாவிலும்...
இந்நோய்க்கு எதிரான சங்கத்தின் நடவடிக்கைகளை அறிந்து, நேபாளத்தில் இருந்து ஒரு குழு இம்மாதம் 8, 9 தேதிகளில் நீலகிரி மாவட்டம் வர உள்ளது. ரத்தசோகை நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் இந் நோய் பாதிப்பு அதிகமாக உள்ள தால், அந்த மாநில அரசு, அங் குள்ள சுகாதாரத் துறை மற்றும் அமைப்புகளுக்கு நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்க, சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளது” என்றார்.