பொங்கல் பண்டிகை: டாஸ்மாக் மது விற்பனை ரூ.850 கோடி?

பொங்கல் பண்டிகை: டாஸ்மாக் மது விற்பனை ரூ.850 கோடி?
Updated on
1 min read

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக்கில் 3 நாள் மது விற்பனை ரூ.850 கோடியை தாண்டியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

டாஸ்மாக் கடைகளில் தினமும்சராசரியாக ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன. இது சனி, ஞாயிறுவிடுமுறை நாட்களில் அதிகரித்துக் காணப்படும்.

அதேபோல், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை பலமடங்கு அதிகரிப்பது வழக்கம்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன.14 முதல் 17-ம் தேதி வரை (திருவள்ளுவர் தினம் விடுமுறை) 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போகிப் பண்டிகையான 14-ம் தேதி ரூ.250 கோடி, பொங்கல் தினத்தன்று ரூ.350 கோடி, காணும் பொங்கலான நேற்று ரூ.250 கோடிக்கும் அதிகமாக விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in