

சென்னை: திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி கடந்த ஆண்டுகளில் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும்.
காரின் தொகைக்கு ஈடாக அந்த மாடுபிடி வீரருக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் ஆகியவற்றை தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் கூடுதல் மகிழச்சி அடையலாம். இந்த கோரிக்கையை முதலமைச்சர் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.