

‘நாடா’ புயல் காரணமாக மின்தடை ஏற்படாமல் தடுக்க கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘நாடா’ புயல் காரணமாக மின்தடை ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் சிறப்பு முகாமுக்கு மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, விழுப்புரம் மண்டலத்தில் மின்வாரிய இயக்குநர், தலைமை பொறியாளர் தலைமையில் ஒரு குழு கடலூரிலும், திருச்சியில் இருந்து மின்வாரிய தலைமை பொறியாளர் தலைமையில் ஒரு குழு நாகப் பட்டினத்துக்கும் அனுப்பப் பட்டுள்ளது.
மேலும், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கடத்திகள் ஆகியவை போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்பட்டால் கூடுதல் ஊழியர்களை மேற்கண்ட இரு மாவட்டங்களுக்கு அனுப்பவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், காற்று பலமாக வீசும் போது வீட்டில் மின் இணைப்பைத் துண்டிக்கவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.