

நிலத்தின் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்படுமா என்று பேரவையில் சமக உறுப்பினர் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர் சரத்குமார் (சமக), “தமிழகத்தின் சில இடங்களில் சந்தை மதிப்பைவிட, அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அதிகமாக உள்ளது. அதனால், இடம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் அவதிப்படுகின்றனர். சிலர் மட்டும் வங்கிக்கடன் அதிகம் கிடைக்கிறது என்பதால் விட்டுவிடுகின்றனர். ஆனால், மொத்தத்தில் பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வழிகாட்டி மதிப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?’’ என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘‘வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க மாவட்ட அளவில் துணைக் குழுக்கள் உள்ளன. அவர்கள் பரிந்துரைப்பதையே மாநில அளவிலான குழு பரிசீலித்து இறுதி செய்கிறது’’ என்றார்.