Published : 18 Jan 2023 04:27 AM
Last Updated : 18 Jan 2023 04:27 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகள் நேரிடுவது , பயணிகள், நோயாளி கள் அவதியுறுவது, அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழின் உங்கள் குரல் பகுதியில் திருநெல்வேலி வாசகர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாநகரில் அதிகளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு போக்குவரத்து அதிகமிருக்கும் காலை, மாலை வேளைகளில் தனியார் பேருந்துகள் அதிவேக மாக இயக்கப்படு கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து களில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது.
தனியார் பேருந்துகளுக்குள் அதிக சத்தத்துடன் திரைப்படப் பாடல் களை ஒலிபரப்பு கிறார்கள். குறிப்பாக வண்ணார் பேட்டையிலிருந்து ஹைகிரவு ண்ட் செல்லும் தனியார் பேருந்துகளில் இத்தகைய விதிமீறல் அதிகமுள்ளது. இதனால் ஹைகிரவுண்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
தனியார் பேருந்துகளில் வண்ணார்பேட்டை யிலிருந்து ஹைகிரவுண்ட் செல்ல ரூ.10 கட்டணம், வண்ணார்பேட்டை யிலிருந்து சமாதானபுரம் செல்ல ரூ.8 கட்டணமே வசூலிக்க வேண்டும். ஆனால் பல தனியார் பேருந்துகளில் தங்கள் இஷ்டத் துக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். ரூ.8 கட்டணத் துக்கு பதிலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சில்லறை கொடுக்க முன்வருவதில்லை. இதுபோன்று நிலவும் பிரச்சினை களை சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். திருநெல்வேலியில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில், தனியார் பேருந்துகளின் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது குறித்து பயணிகளும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
மாநகரில் கடந்த ஆண்டு விபத்துகள் அதிகம் நேரிட்டுள்ளதாகவும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், அவ்வாறு அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கடந்த சில நாட்களுக்குமுன் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.
அதன்படி போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு அபராதமும் விதித்து வருகிறார்கள். திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்று பாளையங்கோட்டை பேருந்து நிலையம், வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் பாலம் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் காவல்துறை சார்பில் ஒலிபெருக்கிகளில் எச்சரிக்கை அறிவிப்புகள் இடைவிடாமல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் வாகன விபத்துகள் நேரிடுவதற்கு இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி, தனியார் பேருந்துகளின் போக்குவரத்து விதிமீறல்கள், குண்டும் குழியுமான சாலைகள், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது என்று வேறுபல காரணங்களும் இருக்கின்றன.
இதையெல்லாம் சரிசெய்வதை விடுத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதை மட்டுமே போக்குவரத்து காவல்துறை குறியாக கொண்டு செயல்படுவது வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மாநகரில் விபத்துகள் நேரிடுவதற்கான பல்வேறு காரணங்களையும் அலசி ஆராய்ந்து, பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள், வாகன ஓட்டிகளின் கோரிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT