

சென்னை: இந்த ஆண்டு குடியரசு தினவிழா உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவுள்ளதால், வரும் ஜனவரி 20, 22, 24 மற்றும் 26 ஆகிய 4 நாட்களுக்கு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தினங்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நமது “குடியரசு தினவிழா” கொண்டாட்டம் வருகிற 26.01.2023 ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 26 மற்றும் குடியரசு தின ஒத்திகை நாட்களான ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய மேற்கண்ட 4 தினங்களுக்கு கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.